நன்மை எது..தீமை எது என்று பார்த்து நன்மையை மட்டும் தேர்ந்தெடுத்து வாழ்வை அமைத்துக் கொள்ளத் தான் மனிதனுக்கு பகுத்தறிவு வழங்கப்பட்டிருக்கிறது..
நன்மை எது..தீமை எது என்று சொல்லித் தரவேண்டியது யார்.? படைத்த இறைவன் தான் சொல்லித் தர முடியும்..
அந்த வகையில் மனிதனை படைத்த நாள் முதல் மனிதனுக்கான வழிகாட்டுதல்கள், வழிகாட்டிகள், காலங்கள் தோறும் இறைவன் புறத்திலிருந்து வந்த வண்ணமிருந்தன..
எப்பொழுதெல்லாம் தீமைகள் பெருகினவோ, எப்பொழுதெல்லாம் நன்மையையும் தீமையும் பிரித்தறிய முடியாத சூழல்கள் உருவாகி அக்கிரமங்கள் தாண்டவமாடினவோ, அப்பொழுதெல்லாம் இறைவன் இறைத் தூதர்களை அனுப்பி வைத்தான். அந்த வரிசையில் இறுதித் தூதர் முகம்மது நபியவர்கள்.
முகம்மது நபியவர்கள் இறைவனல்ல, இறைவனது மகனோ, இறைத்தன்மை கொண்டவரோ, இறைவனது புனிதத்தன்மையில் பங்காளியோ அல்ல.. பிறப்பையும் இறப்பையும் கொண்ட எளிய, இனிய மனிதர்.. மனித விழுமியங்களை முழுமையாக வகுத்தளித்து, அதன் படி வாழ்ந்தும் காட்டிய சிறப்பான மனிதர்.
நபிகளாருக்கு முன்பு பல ஆயிரம் இறைத்தூதர்கள் தோன்றி இறை கட்டளைகளின் படி மக்கள் மத்தியில் சீர்திருத்தம் செய்தனர். நபிகளாருக்கு முந்தைய சீர்திருத்தவாதி, இறைத்தூதர் இயேசு கிறிஸ்து அவர்கள்.
இயேசு கிறிஸ்து ஒருபோதும் தன்னை இறைவனாகவோ, இறைவனது மகனாகவோ, இறைத்தன்மை கொண்டவராகவோ, இறைவனது புனிதத்தன்மையில் பங்கிருப்பதாகவோ சொன்னதில்லை. இறை ஆணையின் படியே தான் தான் செயல்படுவதாக அவர் சொன்னார்.
இயேசு கிறிஸ்துவும் பிறப்பையும் இறப்பையும் கொண்ட எளிய, இனிய மனிதர்.. மனித விழுமியங்களை முழுமையாக வகுத்தளித்து, அதன் படி வாழ்ந்தும் காட்டிய சிறப்பான மனிதர்.
அவரது போதனைகள் சுயநலமிக்க அக்கிரமக்கார மனிதக் கரங்களால் மாசடைந்து போனது. எந்த இறைவனை மண்டியிட்டு பிரார்த்தனை செய்தாரோ, அதே இறைவனுக்கு இணையாக கயவர்களால் இயேசு கிறிஸ்துவும் இறைவனாக ஆக்கப்பட்டார். இது தான் உண்மை சம்பவம்.
இது போன்று மாச்சரியங்கள் மிகுந்த பொழுது தான் நபிகளார் தோன்றி உண்மையான இறைக்கட்டளைகளை மீண்டும் இங்கே ஸ்தாபித்தார்கள்.
திருக்குரானும் பைபிளும் ஒன்றல்ல.. பைபிள் மனிதக் கரங்களால் மாசடைந்து விட்டது என்பதற்கு பைபிளும் சாட்சி சொல்கிறது. கிறிஸ்துவர்களும் சாட்சி சொல்கிறார்கள்.
திருக்குர்ஆன் உண்மையின் வெளிச்சம். பைபிள் பொய்களின், முரண்பாடுகளின் சங்கமம்.
திருக்குர்ஆன் தெளிவான இறை வேதம்.. இந்த வேதம் தான் நபிகளாருக்கு முந்தைய அத்தனை இறைத் தூதர்களுக்கும் வழங்கப்பட்டிருந்தன. அதனாலே முந்தைய வேதங்கள் எத்தனைத் தான் சிதிலமடைந்திருந்தாலும் திருக்குரானின் சாராம்சம் அத்தனை வேதங்களிலும் தென்படுகிறது..
ஒரே இறைவனை பறைசாற்றிக்கொண்டிருக்கிறது.!
-பூமராங்.
இயேசு மீண்டும் வருவார் என்று கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் யூதர்கள் நம்புகின்றனர் ஆனால் முகமது நபி அவர்கள் மீண்டும் வரப் போவதில்லை அவர் மரித்து அடக்கம் பண்ணப்பட்டார். முகம்மது நபி நியாயத்தீர்ப்புகாக காத்திருக்கிறார்.
ReplyDelete